பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னிலை பெற்ற மைத்திரி!

பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

குறித்த தேர்தலில் 111,137 வாக்குகளை மைத்திரிபால சிறிசேன மொத்தமாக பெற்றுள்ளார்.

மேலும் பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 180,847 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 47,781 வாக்குகளையும் தேசிய மக்கள் சக்தி 6,792 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 6,525 வாக்குகளையும் பெற்றுள்ளது.

அந்தவகையில் பொதுஜன பெரமுன கட்சிக்கு 4 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.