யாழ்.ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 87 பேரின் கொரோனா முடிவுகள் வெளியானது!

யாழ். கொரோனா ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 87 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களால் வெளியிடப்படும் நாளாந்த பரிசோனை அறிக்கையில் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 67 பேரின் விபரங்கள் வருமாறு...

போதன வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் 2 பேர்

போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 8 பேர்

பருத்தித்துறை எழுமாற்றுத் தெரிவு - 30 பேர்

பொதுவைத்தியசாலை கிளிநொச்சி - 5 பேர்

பொதுவைத்தியசாலை வவுனியா - 4 பேர்

பொதுவைத்தியசாலை முல்லைத்தீவு - 3 பேர்

பிரதேச வைத்தியசாலை சங்கானை - 2 பேர்

வவுனியா விமானப்படை பிரிவு - 2 பேர்

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 5 பேர்

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 26 பேர்

ஆகிய 87 பேரின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.