தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி, 145 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 54 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இதேவேளை பாராளுமன்றம் எதிர்வரும் 20ம் திகதி ஒன்றுகூடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.