இலங்கையில் உள்ள வாக்கு எண்ணும் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் தீவிரம்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், கொழும்பில் உள்ள 4 வாக்குச் சாவடிகள் உட்பட 97 பாடசாலைகளும் 293 வாக்குச் சாவடிகளும் மூடப்பட்டுள்ளன.

குறித்த இடங்களில் இன்று கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் சுகாதார முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி இதை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வாக்கு எண்ணும் மையங்களாக இருந்த ராயல் கல்லூரி, கொழும்பு, டி.எஸ். மற்றும் இசிபாதனா கல்லூரிகள் முதலில் கிருமிநீக்கம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.