உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் மொத்தமாக 61248 பேர் உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இதேவேளை, குறித்த பெறுபேறுகள் தொடர்பில் 011-2784208, 011-2784537, 011-3188350, 011-3140314 மற்றும் 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.