யாழ்.ஆய்வு கூடத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொடர்பிலான பரிசோதனையில் விடத்தல் பளையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் கொரோனா தொடர்பில் வெளியிடுகின்ற அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

08.08.2020. 6.30 pm. (சனிக்கிழமை ) இன்றைய பரிசோதனையில் தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளையை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 126பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் :

போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 13 பேர்

தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை – 27 பேர் (2 பேருக்கு தொற்று உறுதி )

*பொது வைத்தியசாலை மன்னார் – மூவர்

பொது வைத்தியசாலை வவுனியா – ஒருவர்

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, கரைச்சி, கிளிநொச்சி – 26பேர்

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 56பேர்