கொரோனா அச்சுறுத்தல்... இரு நாடுகளில் சிக்கி தவித்த 283 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு நாடுகளில் சிக்கியிருந்த 283 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவிற்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 123 பேர் இன்று (08) பிற்பகல் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, மாலைத்தீவு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 163 பேர் இன்று மாலை இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இன்று மாலை 3.30 மணியளவில் இந்தியாவின் மாலே விமான நிலையத்தில் இருந்து மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.