பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை!

பொதுத் தேர்தல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க அச்சக திணைக்கள அரச அச்சகர் திருமதி. கங்கானி கல்பனா லியனகே தெரிவிக்கையில் ¸ உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை உறுதி செய்வதற்காக தற்போது தாம் இதனை தேர்தல் திணைக்களத்திற்கு நேற்றிரிவு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு அதனை உறுதி செய்த பின்னர் ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசாங்க அச்சக திணைக்கள அரச அச்சகர் திருமதி. கங்கானி கல்பனா லியனகே கூறினார்.