ஜப்பான் பிரதமருக்கு நன்றி தெரிவித்த மஹிந்த! எதற்காக தெரியுமா?

தான் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயிற்கு தனது நன்றிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இவ்வாறு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் தான் ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய ஜப்பான் சுற்றுலாவின் போதும் மற்றும் அவருடைய இலங்கை சுற்றுலாவின் போதும் இருநாட்டு தொடர்பு வலுவடைந்தது தனக்கு நினைவு வருவதாகவும் குறித்த தொடர்பு நீண்டகாலம் ஒற்றுமையாக தொடர்ந்து நீடிக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.