நிந்தவூர் கடற்கரையில் மீட்கப்பட்ட 4 பிள்ளைகளின் தந்தை சடலம்!

சம்மாந்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று மாலை 52 வயது மதிக்கத்தக்க நபரெருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான அருணாசலம் என்பவரின் சடலம் இவ்வாறு கரையொதுங்கி உள்ளது. இவர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் வசித்து வந்தவர் என தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள சம்மாந்துறை பொலீஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.