வவுனியாவில் பட்டப்பகலில் இடம்பெற்ற திருட்டு... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

வவுனியாவில் பட்டப்பகலில் திருடர்கள் இன்று (08.08.2020) மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா கற்குளி பகுதியில் இன்று மாலை வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (BOXER MODAL NPHI-6704) மோட்டார் சைக்கிளை திருடர்கள் கள்ள சாவி போட்டு திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் முன்னால் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியை இனந்தெரியாத இருவர் திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக வவுனியா பொலிஸார் கற்குளி பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

வவுனியா கற்குளி பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும்,

பொலிஸாருக்கு எழுத்து மூலம் முறைப்பாடுகள் பதிவு செய்தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மேலும் பட்டப்பகலில் திருடர்களால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு காரணமாக தாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பொலிசார் கற்குளி பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேகத்திற்கிடமானவர்களை விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.