சம்பந்திகள் இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகினர்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றது. 21,554 விருப்பு வாக்குகளைப் பெற்ற அக்கட்சியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அந்த ஆசனத்தைப் பெற்றார்.

அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மஹிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜென பெரமுன சார்பில் போட்டியிட்ட வாசுதேவ நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். அவர் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 66,991.

இதன் மூலம், இருவேறு கொள்கைரீதியான கட்சிகளில் போட்டியிட்ட சம்பந்திகள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிறார்கள். விக்னேஸ்வரனின் மகன் வாசுதேவநாணயக்காரவின் புதல்வியை திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.