ஆவா குழுவின் அச்சுறுத்தலால் முன்னணியின் கூட்டம் இரத்து

யாழ்ப்பாணம் இணுவிலில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

புலனாய்வாளர்களின் பின்புலத்தை கொண்ட ஆவா குழு வாள்களைக் காட்டி மிரட்டி, கதிரைகளை அடித்து உடைத்ததால் குறித்த மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி ருவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.