தலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்றைய தினம் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் வைத்து ரணில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.