இலங்கையில் இன்னொரு பகுதியை ஏப்பமிட்ட சீனா!

இலங்கை கூகுள் வரைபடத்தில் ‘CHINA’ என்று எழுதப்பட்டுள்ள பிரதேசம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் வைரலாக சொல்லப்பட்டு வருகின்றது.

இந்த வரைபடத்தில் உள்ள கட்டிடமானது அம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவில சூரியவெவ பிரதேசத்தில் சீனா – இலங்கை துறைமுக சேவை நிறுவனத்திற்கு சொந்தமாகும்.

இலங்கையில் பல திட்டங்களை முன்னெடுத்துவரும் சீனா ஹார்பர் நிறுவனப் பொறியியலாளர்களால் இந்தக் கைவண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருப்பதாவது,

இலங்கை – சீனாவுக்கு இடையிலான நட்புறவைக் குறிக்கும் வகையில் இந்த கட்டிடக்காட்சி உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.

மேலும் இதனை CHINA SW அல்லாமல் CHINA SL என்றும் தூதரகம் கூறியுள்ளது.