விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி!

புதிய அமைச்சரவை கட்டமைப்பில் 28 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சசர்கள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு பொறுப்பாக்கும் அமைச்சுக்களும் இக்கட்டமைப்புக்குள் உள்ளடங்கும்.

அமைச்சரவையின் எண்ணிக்கை, அமைச்சு, உள்ளடங்கும் நிறுவனம் மற்றும் தொடர்பான சட்டம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது.

அமைச்சுக்கள், தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி மற்றும் சுகாதாரம், விளையாட்டு மற்றும் தொழினுட்பதுறை விருத்தி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் வர்த்தமானியில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 28 அமைச்சுக்குள்ளும் 40 இராஜாங்க அமைச்சுக்களும் உள்ளடங்குகின்றன.

குறித்த வர்த்தமானியில் ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

அமைச்சுக்கள்

01 பாதுகாப்பு அமைச்சு.

உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு.

02- நிதியமைச்சு,

நிதி மற்றும் முதலீட்டு வர்த்தகம் மற்றும் அரச தொழில் முயற்சி கொள்கை மறுசீரமைப்பு , சமுர்த்தி , வீட்டு வர்த்தகம் , நுண்கடன் சுய தொழில் வியாபார அபிவிருத்தி , கரும்பு உற்பத்தி அபிவிருத்தி மற்றும் தேசிய வளங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு.

03- புத்தசாசனம் மதவிவகாரம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு.

தேசிய மரபுரிமைகள் மற்றும் கலை கலாச்சார .இராஜாங்க அமைச்சு,

04- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் கடல்பாதுகாப்பு திரவ விநியோகம். , சமூல வலுவூட்டல், கிராமிய வீடமைப்பு மற்றும் வீடமைப்பு திரவ விநியோகம், தோட்ட வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, வலுவூட்டல் இராஜாங்க அமைச்சு..

05- நீதியமைச்சு.

சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு,

06- வெளிநாட்டலுவல் அமைச்சு.

வலய நல்லுறவு விவகார இராஜாங்க அமைச்சு

07- அரச சேவை மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சிமன்ற அமைச்சு.

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற விவகார இராஜாங்க அமைச்சு.

08- கல்வி அமைச்சு.

பெண் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, ஆரம்ப கல்வி மேம்பாடு, பாடசாலை உட்கட்டமைப்பு , கல்வி சேவை, கல்வி மறுசீரமைப்பு, பரீட்சை, பல்கலைக்கழக மற்றும் தூரநோக்கு கல்வி கொள்கை, திறன் அபிவிருத்தி, துறைசார் கல்வி, தொழினுட்பம் மற்றும் புதிய கற்கைகள், பௌத்த மத சார் கல்வி, பிரிவெனா, மற்றும் பௌத்த பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சு.

09-சுகாதார அமைச்சு

மருந்து உற்பத்தி , விநியோகம் மற்றும் கண்காணிப்பு, தேசிய மருத்துவம் முன்னேற்றம் கிராமிய மற்றும் ஆயுர்வேத அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரிசுகாதார இராஜாங்க அமைச்சு.

10- தொழிற்துறை அமைச்சு.

சர்வதேச தொழில் ஊக்கப்படுத்தல், மற்றும் தொழிற் சந்தைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு.

11- சுற்றாடல்.

12- வனஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை காப்புறுதி அமைச்சு.

வனஜீவராசிகள் மற்றும் யானை மனித மோதல் , வனமீள் புத்தாக்கம் தொடர்பான இராஜாங்க அமைச்சு

13- விவசாயம்.

நெல் மற்றும் தானிய உற்பத்தி, சிறுஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி மேம்பாடு மற்றும் உர உற்பத்தி விவசாயத்தை தொடர்பான தொழினுட்ப விருத்தி இராஜாங்க அமைச்சு, கிருமிநாசினி உற்பத்தி மற்றும் விநியோகம். விவசாய காணி அபிவிருத்தி, முட்டை உற்பத்தி தொடர்பான இராஜாங்க அமைச்சு.

14- நீர்பாசன அமைச்சு.

மகாவலி வலயத்துக்குட்பட்டுள்ள குள அபிவிருத்தி, கிராமிய விவசாய அபிவிருத்திக்கான நீர்பாசன விநியோக இராஜாங்க அமைச்சு.

15- காணி அமைச்சு

காணி அபிவிருத்தி, அரச காணிமுகாமைத்துவம் மற்றும் சொத்து அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு.

16 - கடற்தொழில் அமைச்சு

மீன்பிடித்துறை, நன்னீர் மீன்பிடி தொழில், மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, கடற்சார் வள ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு.

17- பெருந்தோட்டத்துறை அமைச்சு.

தோட்ட காணி அபிவிருத்தி, தேயிலை தொழிற்துறை நவீனப்படுத்தல், மற்றும் ஏற்றுமதி முன்னேற்றம், சிறு ஏற்றுமதி உற்பத்திகள் மேம்பாடு, உபரி பயிர்ச்செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,

18- நீர் வழங்கல், அமைச்சு

கிராமிய மற்றும் நகர நீர்வழங்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு.

19- மின்சாரத்துறை அமைச்சு.

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு.

20- சத்கி வலு

21- துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சு.

கப்பற்துறை கட்டமைப்பு வசதிகள், கப்பற்துறை விநியோக அபிவிருத்தி, மற்றும் படகு நவீனப்படுத்தல் இராஜாங்க அமைச்சு.

22- பெருந்தெருக்கல்

கிராமிய மற்றும் அதிவேக தெருக்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு.

23- போக்குவரத்து அமைச்சு.

வாகன கண்காணிப்பு, பேருந்து போக்குவரத்து மற்றும் புகையிரத மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சு

24- இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு.

கிராமிய மற்றும்பாடசாலை மட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு.

25- சுற்றுலாத்துறை அமைச்சு

விமான சேவைகள் மற்றும் வலய நாடுகளுக்கான ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு.

26- சந்தைப்படுத்தல் அமைச்சு

கூட்டுறவு சேவை, முதலீட்டாளர் மற்றும் நுகரவோர் பாதுகாப்ப இராஜாங்க அமைச்சு

27- கைத்தொழில்

ஆடைக் கைத்தொழில் உற்பத்தி, மாணிக்கம் மற்றும் தங்க ஆபரண உற்பத்தி, தளபாட மற்றும் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு.

28- ஊடகத்துறை அமைச்சு.

தபால் சேவை மற்றும் ஊடகவியலாளர்களின் தொழிற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு.