யாழ்.கொடிகாமம் பகுதியில் வீதியில் பயணித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்ததில் நேர்ந்த விபரீதம்!

வீதியால் பயணித்த குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்.கொடிகாமம் ஏ9 வீதி இராமாவில் பகுதியில் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியால் பயணித்துக் கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தர் மயக்கமடைந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இதன்போது தலையில் பலத்த காயமேற்பட்டு குருதி வெளியேறியுள்ளது.

அதனையடுத்து அன்புலன்ஸ் வண்டியூடாக காயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொடிகாமம் மந்துவில் பிரதேசத்தை சேர்ந்த சவரிமுத்து நியூட்டன் என்ற 58 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு காயமடைந்தவராவார்.