மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற மகிழ்ச்சியை தாங்க முடியாத தமிழர்கள் மேற்கொண்ட செயல்!

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற மகிழ்ச்சியை தாங்க முடியாத தமிழர்கள், இன்று கிளிநொச்சியில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியினர் அமோக வெற்றிப்பெற்றதனை தொடர்ந்து நாட்டின் 14 வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றார்.

இதனை கொண்டாடும் வகையில் கிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் இன்று கிளிநொச்சி டிப்போச் சந்தியில் கேக் வெட்டி பட்டாசு கொளுத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.