விட்ட இடத்தில் இருந்து எனது சேவைகள் தொடரும்! வெற்றிப்பெற பாராளுமன்ற உறுப்பினர்

கடந்த 5 வருடங்களில் பதுளை மாவட்டத்திற்கு ஆற்றிய சேவைகளை மூலதனமாக வைத்து பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் தனக்கு கிடைத்த வெற்றி தொடர்பில் பதுளையில் வைத்து இன்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

"எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் காக்கப்பட்டுள்ளது. இதனை மெச்சத்தக்க விடயமாக கருதுகின்றேன்.

எமது சமூகத்தின் பிரதநித்துவத்தை இல்லாது செய்ய சிலர் செயற்பட்டனர் ஆனால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்துள்ளனர். ஆகவே எனது சேவைகள் விட்ட இடத்தில் இருந்து தொடரும்" என்றார்.