பிள்ளையான் அமைச்சர் ஆவதில் சிக்கல்? ஏமாற்றத்தில் வாக்களித்த மக்கள்!

உலக வரலாற்றில் தனது இனத்தின் தலைவர்களையும், புத்தி ஜீவிகளையும் , ஊடகவியலாளர்களையும் கொலை செய்து சிறையில் இருக்கும் ஒரு கொலைக் குற்றவாளிக்கு வாக்களித்த மிகவும் கேவலமான சம்பவம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

ஒரு புறம் தமிழர்களை ராஜபக்ச அரசாங்கம் கொத்து கொத்தாக படுகொலை செய்ததாகவும் ஆயிரக்கணக்கான தமிழர்களை காணாமல் போகச் செய்ததாக ஒப்பாரி வைத்த மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் அந்த கொலைகளுக்கு காரணமாணவர்களுக்கே தங்களது வாக்குகளை வழங்கியுள்ளனர்.

இதன் ஊடாக தமிழ் மக்களின் உயிர் தியாகங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கும் மட்டக்களப்பு மக்களில் ஒரு பகுதியினர் கலங்கம் ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல உன்னத தியாகங்களையும், வீரத் தளபதிகளையும் மாவீரர்களையும் கொண்ட மட்டக்களப்பு மண் ஒரு கொலைகாரக் கும்பலுக்கு வாக்களித்து சிக்கிக்கொண்டுள்ளது.

அபிவிருத்தி என்ற மாயைக்குள் சிக்கிக்கொண்ட மட்டக்களப்பு தமிழ் மக்களின் எதிர்வரும் 5 வருடங்களும் பூச்சியமாகவே இருக்கப்போகிறது.

இருக்கின்ற மாகாண சபை அதிகாரம் முதல் கொண்டு 19 வது திருத்தச் சட்டம் வரை அனைத்தும் இல்லாது போகும்.

வடகிழக்கு இணைப்பிற்கு எதிராக மட்டக்களப்பு மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஹிஸ்புல்லாவை எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற வைத்து முதலமைச்சர் பதவி வழங்கப்படும், அல்லது ஆளுனர் பதவி வழங்கப்பட படும் அப்போது அனைவரும் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்கள், சிங்கள குடியேற்றம், புதிய பௌத்த விகாரைகள் உருவாகும் அதையும் வேடிக்கை பார்க வேண்டி வரும் இவை அனைத்தும் விரைவில் நடக்கும்.

Tmvp கட்சியை இம்முறை வெற்றி பெற வைத்ததில் முக்கிய பங்கு புலம்பெயர் தமிழ் தேசிய வாதிகளுக்கே உண்டு.

இதுவரை காலமும் வெளிநாடுகளில் தமிழ் தேசியம் பேசி புழைப்பு நடத்திய சிலர் சுவிட்சர்லாந்து லண்டன் பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ளனர்.

இவர்கள் ஒரு புறம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உறவை வைத்துக் கொண்டு மறுபுறம் பிள்ளையானுடன் கள்ள உறவை வைத்துகொண்டிருந்தனர்.

அதில் மிக முக்கியமானவர்கள் மங்களேஸ்வரியும் வெளிநாட்டில் உள்ள அவரது உறவினர்களும் உள்ளனர்.

தமிழ் தேசியம் பேசி பிள்ளையான் கருணா குழுவால் உயிர் அச்சுறுத்தல் என்று கூறி ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று சுகபோகமாக வாழும் சில ஊடகவியலாளர்களும் பிள்ளையானின் வெற்றிக்கு பின்னால் நின்று உழைத்துள்ளனர். அவர்கள் மட்டக்களப்பு மக்களிடம் பிள்ளையானை தியாகியாக காட்டினர். பிள்ளையானுக்காக உழைத்த புலம்பெயர் சமூகம் குறித்த விபரங்களை விரைவில் வெளியிடுவோம்.

இதைவிட பிள்ளையானின் வெற்றிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் செயற்பாடுள் முக்கியமானவை.

தமிழ் தேசியத்தை அழித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கிடைத்த கிழக்கு மாகாண முதலமைச்சரை தாரை வார்த்து கொடுத்ததன் விளைவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பில் தனது தோல்வியை சந்திக்க காரணம். இது கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே பிரதிபலித்திருந்தது.

சரி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை மீறி பிள்ளையானால் மட்டக்களப்பு மக்களுக்கு என்ன செய்ய முடியும்?

முதல் சிறையில் இருக்கும் பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட முடியாது.

அமைச்சுப் பதவி ஏற்க முடியாத ஒரு கொலைக் குற்றவாளிக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் வாக்களித்துள்ளனர்.

இதற்கான காரணம் பிள்ளையான் குழு மீதுள்ள அச்சம் காரணமாகவே பல வர்த்தகர்கள், சாராயக் கடை முதலாளிகள், விடுதி ஹோட்டல்கள் முதலாளிகள், அரச அதிகாரிகள், மண் கடத்தல் காரர்கள் இளைஞர்கள் என அனைவரும் தங்களது தொழில் மற்றும் பணம், சேர்த்து வைத்த சொத்து காணிகளை பதவிகளை பாதுகாப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல செல்வந்தர்கள், மண் கொள்ளையர்கள், அரச அதிகாரிகள் அச்சத்தின் இம்முறை பிள்ளையானுக்கும் வியாழேந்திரனுக்கும் வாக்களிக்குமாறு பொதுமக்களை தூண்டியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் வெற்றி பெற்றதன் விளைவாக அச்சமடைந்த வடகிழக்கு தமிழ் மக்கள் அரச ஆதவு கட்சிகளுக்கு வாக்களிக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர்.

கிழக்கை மீட்போம் என்று சொல்லி பதவிக்கு வந்தவர்களால் கடைசி முஸ்லிம் பிரதேசங்களுக்கு தொழிலுக்காக சென்று அவஸ்தைப்படும் தமிழ் பெண்களையாவது மீட்க முடிகின்றதா? என்பதை பார்ப்போம்