பாதணிகளில் புகையிலையை மறைத்து சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி!

இரு சிறைச்சாலைகளுக்கு பாதணிகளில் புகையிலையை மறைத்து எடுத்துச் சென்ற இருவரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று செவ்வாய்கிழமை கைதிகளை பார்வையிடுவதற்காக சென்ற நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதியொருவரை பார்வையிடுவதற்காக சென்ற சந்தேகத்திற்கிடமான நபரை சோதனைக்குட்படுத்திய போது, அவரின் பாதணியிலிருந்து 10 புகையிலை துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவளை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதியொருவரை பார்வையிடுவதற்காக சென்ற இன்னுமொரு நபரின் பாதணியிலிருந்தும் புகையிலை துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர் கொழும்பு மற்றும் பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.