யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த நபர் இவர்தான்! வெளியான புகைப்படம்

யாழில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நபர் ஒருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ச்தகவல்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் பருத்தித்துறை வியாபாரி மூலையில் இன்று மாலை இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது -39) என்பவரே இவ்வாறு இன்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.