உறங்கிக் கொண்டிருந்த காதலிக்கு முன்னாள் காதலன் செய்த கொடூர செயல்!

கேகாலையில் வீடொன்றின் ஓடு பிரித்து, உறங்கிக் கொண்டிருந்த முன்னாள் காதலிக்கு பெற்றோல் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் காதலனை பொலிசார் தேடி வருகின்றனர்.

இச்சமப்வம் அலதவல, நீலபால கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறக்கத்தில் இருந்த 20 வயது யுவதியே பெற்றோல் ஊற்றி தீமூட்டப்பட்டுள்ளார்.

நள்ளிரவு நேரம் வீட்டின் ஓட்டை கழற்றி, அதன்மூலம் பெற்றோல் ஊற்றி, யுவதி மீது தீ மூட்டியுள்ளார் அவரது முன்னாள் காதலன்.

பலத்த தீக்காயங்களுக்கு ஆளான யுவதி தற்போது கேகாலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகிறார்.

யுவதிக்கு தீமூட்டியவர் அவரது முன்னாள் காதலன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவர் ஏற்கனவே ஒரு முறை யுவதியை கத்தியால் குத்த முயற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.