கண்டியில் இனம்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்ட 12 வயது மாணவி! பின்னர் நடந்த சம்பவம்

கண்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவியை கடத்திச் சென்ற இனம்தெரியாத குழுவினர் சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் கண்டியிலுள்ள இன்னொரு பாடசாலையின் முன்பாக அவரை இறக்கி விட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.

பஹிரவகந்தவைச் சேர்ந்த 12 வயது மாணவி காலை 06.45 மணியளவில் தனது வீட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு முகக்கவசத்தை பெற சென்றார்.

இதன்போது வாகனத்தில் வந்த இனம்தெரியாத குழுவொன்று சிறுமியை கடத்தி சென்றது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டனர்.

விசாரணைகளை நடத்த வீட்டிற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழந்தையின் மொபைல் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தனர்.

தொலைபேசி தரவுகளின் அப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கண்டியில் பல இடங்களுக்கு இடையில் சிறுமி கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

காலை 09.45 மணியளவில் கண்டியில் உள்ள மற்றொரு முக்கிய பாடசாலையின் நுழைவாயிலில் சிறுமி இறக்கிவிட்டுள்ளனர்.