இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 17 பேர் குணமடைவு! சுகாதார அமைச்சு தகவல்

நாட்டில் கொரோனா தொற்று வைரஸில் இருந்து 17 பேர் இன்று குணமடைந்து அவர்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை நாட்டில் 3,276 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இலங்கையில் இதுவரையில் மூவாயிரத்து 276 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் இன்னும் 203 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், 44 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன், வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.