72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் பாட்டுடைத் தலைவன் எஸ்.பியின் உடல் நல்லடக்கம்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த இறுதி கிரியையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உறவினர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய பிரபலங்கள் என பலரும் கண்ணீர் மல்க பங்கேற்றிருந்தனர்.

புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு அவரது மகன் சரன் இறுதிச் சடங்குகளை செய்து வருகின்றார்.

திருவள்ளூர்- தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பண்ணைத் தோட்டத்திலுள்ள அவரது வீட்டிலேயே தற்போது, இறுதிச் சடங்குகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும், அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வருகைதந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அத்துடன் அவரது மறைவுக்கு பல முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது உடல், சற்று நேரத்தில் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.