இராணுவ மரதன் ஓட்டப்போட்டியில் தமிழனுக்கு தங்கப்பதக்கம்

இராணுவத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2020 க்கான இராணுவ மரதன் ஓட்ட போட்டியானது பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான, கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை காலை 6 மணிக்கு இராணுவ தலைமையகத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போட்டியில் 17 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 125 ஓட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இராணுவ தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் முடிவடைந்தது.

22 கி.மீ மரதன் ஓட்ட மெய்வல்லுநர் போட்டி ஆண்கள் பிரிவில் அட்டன், வெலி ஓயா தோட்டத்தைச் சேர்ந்தவராவார். ஏ. சண்முகேஸ்வரன் ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்கள் 16 செக்கன்களில் நிறைவுசெய்துள்ளதுடன், பெண்கள் பிரிவில் வத்சலா எம். ஹேரத்தும் வெற்றிபெற்று தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.