தேங்காயை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

கட்டுப்பாட்டு விலைக்கு மேல் தேங்காய் விற்கும் நபர்களை அடையாளம் காண 56 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காண 154 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகார சபை அண்மையில் வர்த்தமானி மூலம் வெளியிட்டிருந்தது.

சந்தையில் தேங்காய்கள் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.