கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பிய இருவருக்கு யானையால் காத்திருந்த ஆபத்து!

கல்கமுவ, தேவகிரிய பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

40 மற்றும் 56 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.