இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லெபனானில் இருந்து வந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3362 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3210 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் 139 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.