நியூசிலாந்து பாராளுமன்றில் உறுப்பினராக இலங்கை பெண்!

நியூசிலாந்தில், பாராளுமன்றத்திற்கு இலங்கையைில் பிறந்த வனுஷி வால்டர்ஸ் என்ற 36 வயது பெண்மணி தெரிவாகியுள்ளார்.

இதனையடுத்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபராக இவர் உள்ளார்.

நியூசிலாந்தின், வடமேற்கு ஆக்லாந்தில் இடம்பெற்ற அமைச்சருக்கான தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலும் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், ஹாமில்டனுக்கான கிரிக்கெட் வீரருமான தேசிய வேட்பாளர் ஜேக் பெசன்ட் என்பருக்கு எதிராக ஒரு குறுகிய வாக்கு வித்தியாசத்தில் இவர் தெரிவாகியுள்ளார். பெசாண்டின் 12,727 வாக்குகளையும், வனுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளைப் பெற்றுள்ளனர்..

வனுஷி வால்டர்ஸ் தமது 5 வயதில் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார், வால்டர்ஸ் ஒரு மனித உரிமை வழக்கறிஞராகவும், மனித உரிமைகள் ஆணையகத்தின் மூத்த மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.