22 ஆம் திகதி நீண்ட தூர பஸ் சேவைகள் இடம்பெற எதிர்பார்ப்பு

இன்று21 ஆம் திகதி சனிக்கிழை மற்றும் நாளை 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் நீண்ட தூர பஸ் சேவைகள் இடம்பெற எதிர்பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் நீண்ட தூர பஸ் சேவைகளை மேற்கொள்ள எதிர் பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து பயணிகளை பஸ்களில் ஏற்றவோ அல்லது இறங்கவோ அனுமதிக்கப்படமாட்டாது.

ஏனைய பிரதேசங்களில் வழமை போல் பஸ் சேவைகளை முன்னெடுக்குமாறு டிப்போ அதிகாரிகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பயணிகளின் வேண்டுகோள் மற்றும் பயன்பாட்டிற்காகக் குறித்த இரண்டு நாட்களுக்கு நீண்ட தூர பஸ் சேவைகள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கா தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்தார்.