போலி விசா மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞன் கைது

போலியான முறையில் தயாரிக்கப்பட்ட விசா அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலிக்கு பயணிக்க முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லைக் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளினால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம்-கொடிகாமம் பகுதியில் வசித்து வரும் 25 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது