யாழ் செல்வந்நிதி முருகன் ஆலயத்தில் பச்சை மட்டையுடன் பொலிசார்

செல்வந்நிதி முருகன் ஆலயத்தின் சூரன் போரில் பொலிசார் பச்சை மட்டையுடன் நின்றதும், சப்பாத்து கால்களுடன் நடமாடியதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா சுகாதார நடைமுறை என ஆலயத்திற்குள் பக்தர்களை அனுமதிக்காமல் வௌியே தடுக்கப்பட்டனர். எனினும், வெளியே மக்கள் முண்டியடித்தனர்.

இதேவேளை, ஆலயத்திற்குள் பச்சைமட்டையுடன் நின்று பக்தர்களை பொலிசார் விரட்டியுள்ளனர். அத்துடன் சப்பாத்துடன் பொலிசார் ஆலய சூழலில் நடமாடியதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.