இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் இன்று (21) மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,537 உயர்வடைந்துள்ளதுடன் 5,873 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 13,590 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 480 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக உயர்வடைந்துள்ளது.