கே.எம். சிவாஜிலிங்கத்தை தீண்டிய பாம்பு தொடர்பில் வெளியான தகவல்!

பாம்பு தீண்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம். சிவாஜிலிங்கம் அபத்தான கட்டத்தை கடந்து சாதாரண நிலைக்கு மீண்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கையில் பாம்பு தீண்டிய நிலையில் நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது சாதாரண நிலைக்கு வந்துள்ளார்.

இதே வேளை அவருக்கு கடித்த பாம்பை போத்தல் ஒன்றில் அடைத்து வைத்தியசாலை கொண்டுசென்ற போதும் அது உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டது.