கொழும்பு வைத்தியசாலையிலிருந்து மகனுடன் தப்பியோடிய பெண் பொலிஸாரால் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தனது இரண்டரை வயது மகனுடன் தப்பி ஓடிய பெண் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எஹலியகொட பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணும் அவரது இரண்டரை வயது மகனும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு முன்தினம் இரவு 09 மணியளவில் தப்பிச் சென்றதையடுத்து அவர்களை தேடும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலே குறித்த பெண் இரத்தினபுரி-எஹெலியகொட பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.