சுவிச்சர்லாந்து குடும்பஸ்தர் ஒருவரின் செயலால்! யாழில் வீதிக்கு வந்த திருமணமான இளம் பெண்..

சுவிஸ்லாந்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருடன் வட்சப் ஊடாக கள்ளக்காதல் செய்த இளம் அரச ஊழியர் பெருமளவு கணவனின் பணத்துடன் தனது கணவனை விட்டுப் பிரிந்துள்ளதாக கணவரால் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

தனது மனைவி சுவிஸ் குடும்பஸ்தாருக்கு அனுப்பிய குஞஞ் செய்தி , சுவிஸ் குடும்பஸ்தர் மனைவிக்கு அனுப்பிய தகாத வீடியோக்கள் என்பவற்றையும் பொலிசாரிடம் ஆதாரங்களாக கொடுத்துள்ளார் கணவர்.

வலிகாமம் பகுதியில் உள்ள அரசசெயலகம் ஒன்றில் பணியாற்றும் 28 வயதான இளம்பெண் தொடர்பாகவே கணவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

இருவரும் திருமணம் முடித்து இருவருடங்கள் ஆனநிலையிலேயே தற்போது சுவிஸ்குடும்பஸ்தர் அப்பெண் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சுவிஸ்குடும்பஸ்தர் தொடர்பான முழு விபரங்களும் கணவருக்கு தெரியாத போதும் தனது மனைவியின் தொலைபேசியைக் கைப்பற்றி அவனுடைய அனைத்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குறுங் செய்தி போன்றவற்றை கணவர் கைப்பற்றியுள்ளார்.

இதனையடுத்து கணவனுக்கும் மனைவிக்கும் முரண்பாடு எழுந்த போது இருவரின் பெயரில் வங்கியில் சேமிப்பாக இருந்த பணத்தை தனது கணக்குக்கு மாற்றிய பின்னர் கணவனின் நகைகள் உட்பட்ட பெருமளவு பணம் மற்றும் சொத்துக்களுடன் மனைவி தன்னை விட்டுப் பிரிந்துள்ளதாக கணவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.