இலங்கையின் வடக்கு பகுதியை நெருங்கிய பாரிய ஆபத்து! எச்சரிக்கை

இலங்கையின் வடக்கு மாகாணத்தை தாக்கவல்ல மிகப்பெரிய புயல் சின்னமொன்று நாளை மறுதினம் அளவில் வங்காளவிரிகுடாவில் உருவெடுக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

செய்மதித் தரவுகளை வைத்து கணிக்கும்போது குறித்த புயலின் பாதை வட மாகாணத்தின் முல்லைத்தீவை நோக்கி நகர்வது தெளிவாக தெரிகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் வடக்கு மக்கள் இடம்பெயரும் அளவுக்கு அதிகமான மழைவீழ்ச்சியும் பதிவாகலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்தை புரட்டி போட்ட ‘நிஷா’ புயல் போன்றே இதனுடைய இயல்பும் வழித்தடமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.