இ.போ.ச பஸ்கள் நாளை முதல் வழமைக்கு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பஸ் போக்குவரத்துக்கள் நாளை திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் என இலங்கை போக்குவரத்துச் சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் பயணித்ததால் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.