பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக்கு கொரோனா

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரும்பாலானோருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் நேற்று (சனிக்கிழமை) வெளியானதிலேயே வர்த்தகர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காணும் வகையில் தொடர்ந்து பி.சி.ஆர்.பரிசோதனைகளை முன்னெடுக்க, தம்புள்ளை நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 988ஆக காணப்படுவதுடன், இதுவரை 109பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.