ரிஷாத் பதியுதீன் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டார்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்ற பிணை உத்தரவின் பின்னர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகளின் அடிப்படையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே அங்கிருந்து, அரசாங்கம் தனிமைப்படுத்தல் நிலையமாக அறிவித்துள்ள கல்கிசை ஹோட்டல் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன், தற்போது கட்டணம் செலுத்தி அந்த ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.