மட்டக்களப்பில் பெரும்பான்மை இனத்தவர்களால் தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரம்: வெளியான அதிர்ச்சி காணொளி

மட்டக்களப்பு எல்லையில் தமிழர்கள் மீது பெரும்பான்மை இனத்தவர்கள் மிக மோசமாக தாக்கியுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பேசிய காணொளி ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை தமிழர்களை தாக்கியதுடன் அவர்களை பிடித்து பொலிஸில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணைப் மேச்சல் தரைப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஆறு பண்ணையாளர்களை பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் பிடித்துச் சென்று மகா ஓயா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு பிடித்துச் சென்ற பண்ணையாளர்கள் மீது பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்குதல் நடத்தி சித்திரவதை செய்ததாக தாக்குதலுக்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மை இன விவசாயிகளின் பின்னணியில் இருந்து செயற்படும் கிழக்கு மாகாண ஆளுநரே மேற்படி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதற்கு காரணமாக உள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு விரோதமாக பிற மாவட்டங்களில் இருந்த பெரும்பான்மை இனத்தவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம் செய்ய அனுமதித்ததன் விளைவாகவே தமிழ் பண்ணையாளர்கள் மீதும் அவர்களது மாடுகள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்த காரணம்.