வடக்கின் மற்றொரு மாவட்டத்திற்கும் வரவிருக்கும் மிகபெரும் ஆபத்து!

இலங்கையின் வடக்கே வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட பி.ஸி.ஆர் பரிசோதனைகளில் அதிகமான கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் நகர்ப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.

இதனால் வவுனியா நகரசபை எல்லைக்குள் அடங்கும் பெரும்பாலான ஊர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் உள்ளே செல்வதற்கோ வெளியே வருவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியாவைத் தொடர்ந்து மன்னாரிலும் கொரோனா பீதி குடிகொண்டுள்ளது. இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது வவுனியாவிலிருந்தும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் தகவல்ப்படி, இன்று யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 679 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மன்னார் மாவட்டத்திலிருந்து ஐந்து பேருக்கும் வவுனியா மாவட்டத்திலிருந்து நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.