திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம்!

திருகோணமலை புல்மோட்டை - ஜின்னா நகர் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கரையொதுங்கியதாகவும் தெரியவருகின்றது.

குறித்த சடலம், 45 வயதுடைய நபர் எனவும், வெள்ளை நிறத்தில் கட்டகை சேட் அணிந்துள்ளதாகவும், தெரியவருகின்றது.

யாருடைய சடலம் என்பது பற்றிய விபரம் இன்னும் தெரியவில்லை என புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கரையொதுங்கிய சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.