இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா தொற்றால் பலி! அதிகரிக்கும் மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 49 259 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 42 621 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6398 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.