வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு புதிய கொரோனா தொற்று உறுதி!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் பிரிட்டன் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார சேவையின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கிரிக்கெட் வீரர் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.