யாழ்ப்பாணத்தை குறிவைத்த சீனா: அனுமதி வழங்கிய அமைச்சரவை!

நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்தத்திட்டத்தை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்துகிறது.

மின்சார வழங்கள் நம்பகத்தன்மை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை உருவாக்க சீனாவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது, சீனாவின் கூட்டுமுயற்சி நிறுவனமான சைனோசர் எச்வின் நிறுவனம் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது..

இந்நிலையில் தீவகத்தில் வாழ்கின்ற பூர்வீக குடிமக்களை படிப்படியாக வெளியேற்றி பாதி தீவகத்தினை சீனாவுக்கு விற்பனை செய்வதும், மிகுதியில் சிங்கள குடியேற்றங்கள், கடற்படை மற்றும் ராணுவத்திற்கு, வருமானத்தை தேடிக்கொடுக்கின்ற பாரிய ஹோட்டல்கள் (KKS தல்செவன விடுதி போன்று) அமைப்பதே பேரினவாதிகளின் நீண்டகாலத்திட்டம் ஆகும், இதற்கு அரசுக்கு முண்டுகொடுக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளும் முழுமையாக துணைநிற்கின்றனர் .

இதன் ஓர் அங்கமாகவே காணி அபகரிப்புக்கான முயற்சிகள் பிரதேச செயலக அதிகாரிகளின் ஒத்துழைப்போடு இடைவிடாது நடைபெறுகின்றன. அன்பார்ந்த மக்களே தயவுசெய்து விளித்தெழுங்கள், சீனாவின் கைகளுக்குள் தீவகம் சென்றால் அதன் பிறகு உங்களை ஆண்டவர்களாலும் காப்பாற்றமுடியாது .

குறிப்பு – எரிசக்தி மின்நிலையமென்பது தோல்வியடைந்த ஓர் திட்டமாகும் . தீவகத்தில் அதனை பரிசோதித்து தீவகத்தின் இயற்கைவளங்களை முற்றாக அழிப்பதே இதன் பிரதான நோக்கமாகும் என்ற பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.