கொரோனா சிகிச்சை நிலையத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சியான நிகழ்வு: குவியும் வாழ்த்துக்கள்!

கொரோனா தொற்று சிகிச்சை மையத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றை பற்றியே நாடே பரவலாக பேசிக்கொண்டிருக்கின்றது.

எம்பிலிபிட்டி யோதகம கொரோனா சிகிச்சை மையத்தில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவே நாட்டின் கவனத்தை ஈர்த்த ஓரு நிகழ்வாகக் காணப்படுகின்றது.

மேலும் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 13 வயது சிறுமி ஒருவருக்கே இவ்வாறு பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

அத்தோடு இது தொடர்பாக குறித்த சிறுமியின் தாய் தாதி ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், அந்த தாதி ஏனைய தாதிகளுக்கு இந்த தகவலை தெரிவித்து அவர்களின் உதவியுடன் இந்த நிகழ்வை நடத்தியாக தெரிவிக்கப்படுகின்றது.