மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்

பிபில – பதுள்ளகம்மன பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் நேற்று (21) இரவு தனது 3 வயது மகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக தன் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய் 24 வயதுடையவர் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

வீட்டுக்கு அண்மையிலிருந்த 40 அடி ஆழமான கிணற்றிலிருந்து குறித்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் இருப்பதை கண்ட உறவினர்கள் பிபில காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கும் இராணுவத்தில் பணி புரியும் அவரது கணவருக்குமிடையில் தொலைபேசியின் மூலம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின் குறித்த பெண் மற்றும் குழந்தையை காணவில்லையென அந்த சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீட்டுக்கு அருகாமையிலிருந்த கிணறு ஒன்றில் இருந்து இருவரினது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.